/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை
/
கீழடி அருங்காட்சியகத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை
கீழடி அருங்காட்சியகத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை
கீழடி அருங்காட்சியகத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை
ADDED : அக் 26, 2025 01:47 AM
கீழடி: கீழடி அருங்காட்சியகத்திற்கு, அக்., 27, 28, 30 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய அணிகலன், எழுது பொருட்கள், சுடுமண் பொருட்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 2023ல் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்திற்கு, ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும், சனி, ஞாயிறு கிழமைகளில், 7:00 மணி வரை செயல்படும். வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை விடுமுறை.
மேலும், 27ம் தேதி காளையார் கோ விலில் மருதுபாண்டியர் விழா, 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏராளமான பொதுமக்கள், அரசியல் அமைப்புகள், சமுதாய தலைவர்கள் வருகை தருவர். எனவே, கீழடி அருங்காட்சியகத்திற்கு, 27, 30ல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாராந்திர விடுமுறை, 28ல் வருவதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

