/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை மருத்துவமனைக்கு மூன்று டாக்டர்கள் நியமனம்
/
மானாமதுரை மருத்துவமனைக்கு மூன்று டாக்டர்கள் நியமனம்
மானாமதுரை மருத்துவமனைக்கு மூன்று டாக்டர்கள் நியமனம்
மானாமதுரை மருத்துவமனைக்கு மூன்று டாக்டர்கள் நியமனம்
ADDED : மே 25, 2025 11:05 PM
மானாமதுரை:மானாமதுரை அரசு மருத்துவமனையில் தினமலர் செய்தி எதிரொலியாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால், 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும்,50க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மதுரை, பரமக்குடி நான்கு வழிச்சாலையில் மானாமதுரை நகரம் அமைந்துள்ளதால் அடிக்கடி இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி காயம் அடைபவர்களுக்கு மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை,மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 6 மாதமாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி அடைந்து வந்தனர். குறிப்பாக மாலை 5:00 மணிக்கு மேல் டாக்டர்களே இன்றி நர்சுகள் தான் சிகிச்சை அளித்து வந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு புதிதாக 3 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தலைமை மருத்துவ அலுவலர் அசாருதீன் கூறியதாவது, இந்த மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய சான்று கிடைத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தலாம். புதிதாக 3 டாக்டர்கள் நியமிக்கப்பட்டதால், 24 மணிநேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும், என்றார்.