நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:
காரைக்குடியில் நமது உரிமை பாதுகாப்பு இயக்க 10ம் ஆண்டு துவக்கம்,விருது வழங்கும் விழா, 29ம் ஆண்டு சட்ட சேவைகள் தின விழா நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்நாதன் தலைமை ஏற்றார். மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. கவுரவ ஆலோசகர் சின்னத்துரை பேராசிரியர் நிலவழகன் மற்றும் முத்துக்குமார் தொடங்கி வைத்தனர்.
பரிசளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., கற்பகம் தொடங்கி வைத்தார். தேவகோட்டை சேர்மன் சுந்தரலிங்கம், காரைக்குடி முன்னாள் சேர்மன் மெய்யப்பன் முன்னிலை வகித்தனர். நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் வரவேற்றார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, டாக்டர் ஸ்டாலின் ராஜா மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முகமது ஆசிக் நன்றி கூறினார்.

