/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் கோட்டை கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
/
திருப்புத்துார் கோட்டை கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
திருப்புத்துார் கோட்டை கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
திருப்புத்துார் கோட்டை கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 17, 2024 11:04 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயிலில் பிப். 21 ல் நடைபெற உள்ள கும்பாபிேஷகத்தை முன்னிட்டு இன்று யாகசாலை பூஜை துவங்கி 4 நாட்களில் ஆறு கால பூஜை நடைபெற உள்ளன.
திருப்புத்துார் நகரில் முன்பிருந்த கோட்டையில் கிழக்கு திசையில் கோட்டைக்கருப்பர் கோயில் அமைந்துள்ளது. தற்போது கோட்டைக்கருப்பர் கோயிலில் திருப்பணிகள் நடந்து பிப்.21 ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.
அதை முன்னிட்டு இன்று அதிகாலை பூர்வாங்க பூஜை துவங்கி, காலை 9:00 மணிக்கு வாஸ்துசாந்தி நடைபெறும்.
பின்னர் மாலை 4:00 மணிக்கு கலசங்கள் யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்படும். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு முதற்காலயாகசாலை பூஜை துவங்கும்.
நாளை காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை நடைபெறும்.
பிப்.20ல் காலை 8:00 மணிக்கு நான்காம் காலயாகபூஜை, மாலை 5:30 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜை நடைபெறும். பிப்.21 காலை 6:00 மணிக்கு 6ம் காலயாக பூஜை துவங்கி பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். பின்னர் கலசங்கள் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு மேல் காலை 10:00 மணிக்குள் விமான,மூலமூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெறும். ஏற்பாட்டினை அறங்காவலர் எஸ்.வயிரவன் தலைமையில் திருப்பணிக்குழுவினர் செய்கின்றனர்.