/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீன்வரத்து குறைவால் திருப்புத்தூர் சில்லறை வியாபாரிகள் பாதிப்பு
/
மீன்வரத்து குறைவால் திருப்புத்தூர் சில்லறை வியாபாரிகள் பாதிப்பு
மீன்வரத்து குறைவால் திருப்புத்தூர் சில்லறை வியாபாரிகள் பாதிப்பு
மீன்வரத்து குறைவால் திருப்புத்தூர் சில்லறை வியாபாரிகள் பாதிப்பு
ADDED : செப் 08, 2025 06:08 AM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் மொத்த மீன் மார்கெட்டில் மீன் வரத்துக் குறைவால் சில்லறை வியாபாரிகளும், மீன் பிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்புத்தூர் மீன் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் விற்பனை நடக்கும். தூத்துக்குடி, கன்னியாகுமரி மட்டுமின்றி திருச்செந்தூர், கேரளா, ஆந்திரா வளர்ப்பு மீன்களும் விற்பனைக்கு வருகின்றன.
தற்போது கடலில் மீன்பாடு குறைந்து விட்டதால், திருப்புத்தூருக்கு மீன் வரத்து குறைந்து விட்டது. இங்கு நகரை, பாறை, விளா, கருநகரை ரக மீன்களின் வரத்து குறைந்துவிட்டது. நெய் மீன் கிலோ ரூ.800 ல் இருந்து ரூ.1,400 ஆக உயர்ந்துவிட்டது. மக்கள் அதிகமாக வாங்கும் பாறை மீன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளா, ஆந்திராவிலிருந்து வரும் சங்கரா மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.
மீன் மொத்த வியாபாரிகள் கூறியதாவது, அடுத்து மழை பெய்து கடலில் சேரும் போதுதான் வலையில் அதிக மீன்கள் சிக்கும். அது வரை மீன் வரத்து குறைவாகவே இருக்கும், என்றனர்.