/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அலைபேசியில் நிலங்கள் பற்றிய முழு விபரம் அறிய ‛' நில அடுக்கு' திட்டம் காரைக்குடி, செங்கல்பட்டு தேர்வு

ADDED : செப் 05, 2025 12:20 AM
சிவகங்கை:நிலம் சார்ந்த விபரங்களை 'தமிழ் நிலம்' செயலி மூலம் அலைபேசி வழியாக மக்கள் அறிந்து வருகின்றனர். இந்த செயலியில் மேலும் 20 வித விபரங்களை பார்க்க ஏதுவாக 'நில அடுக்கு' (லேண்ட் ஸ்டாக்) திட்டம் செயல் படுத்த உள்ளனர்.
மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இந்திய அளவில் விவசாய, குடியிருப்பு நிலங்களை மக்கள் எளிதில் அலைபேசி மூலம் அறிந்து கொள்ளும் விதமாக நில அடுக்கு (லேண்ட் ஸ்டாக்) திட்டத்தை செயல்படுத்த உள்ளது. சோதனை ரீதியில் ராஜஸ்தான், தமிழகத்தில் செயல்படுத்த உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு ஊராட்சியையும் தேர்வு செய்துள்ளனர். 'தமிழ் நிலம்' செயலியில் அலைபேசி மூலம் நிலத்தின் உரிமையாளர் விபரம், பட்டா, சர்வே எண், நிலத்தின் தற்போதைய நிலை போன்ற விபரங்களை பார்த்து, புதிதாக நிலங்களை வாங்குதல், நிலங்களை பதிவு செய்தல் போன்ற முடிவுகளை எடுத்துக்கொள்ள முடியும்.
அலைபேசியில் நிலம் சார்ந்த தகவல் அதே செயலியில், கூடுதலாக நிலம் சார்ந்து 20 விதமான விபரங்கள், பிளான் அப்ரூவல் பெற்ற இடமா, 'மாஸ்டர் பிளான்' நகரில் விவசாயம், குடியிருப்பு, வர்த்தகத்திற்கென ஒதுக்கப்பட்ட நிலம் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
நகர் ஊரமைப்பு துறை அதிகாரி கூறியதாவது: இதற்காக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக நில வளத்துறை உயர்மட்ட குழு தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டகுழுவினர் 'மாஸ்டர் பிளான்' திட்ட நகரான காரைக்குடியில் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.'திட்டம் வெற்றி பெற்றால், மாநில அளவில் திட்டம் செயல் படுத்தப்படும், என்றார்.