ADDED : ஜூன் 20, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் புதுத்தெரு பகுதியில் சில கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை கொண்டு வந்து கடைகளுக்கு விற்பனை செய்த நபரை பிடித்தனர்.
அவர் சமுத்திராப்பட்டி பெரியழகன் மகன் அசோக்குமார்46, என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலையை வியாபாரிகளுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அசோக்குமாரைக் கைது செய்து 31 கிலோ புகையிலை, மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.