/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டோல்கேட் பிரச்னை- 20 பேர் மீது வழக்கு
/
டோல்கேட் பிரச்னை- 20 பேர் மீது வழக்கு
ADDED : டிச 06, 2025 09:59 AM
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் அருகே செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியில் கூடி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக 20 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருமயம் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச்சாவடியில் டிராக்டருக்கு சுங்கவரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் உரிமையாளர்கள்,கட்சியினர் சுங்கச்சாவடி பணியாளருடன் வாக்குவாதம் நடந்தது.
டிராக்டர்களை ரோட்டில் குறுக்காக நிறுத்தினர். கீழச்சிவல்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
அப்போது சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக டிராக்டர் நிறுத்தியதாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சீனிவாசன், பார்த்தசாரதி, சேவற்கொடியான்,மாறன் உள்ளிட்ட 20 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

