ADDED : டிச 19, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் நான்கு கிலோ நுாறு ரூபாய் என தக்காளி கூவி கூவி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
சமையலில் தக்காளி தேவை மிகவும் அத்தியாவசியமானது. திருப்புவனம் வட்டாரத்தில் அல்லிநகரம், சொக்கநாதிருப்பு, பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுத் தக்காளி பயிரிடப்பட்டிருந்தது. நாளடைவில் போதிய விலை கிடைக்காததால் யாரும் பயிரிடுவதில்லை. நாட்டுத்தக்காளி விளைச்சல் பெருமளவு இல்லாததால் பெங்களுரூ தக்காளி பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திருப்புவனம் வார சந்தையில் சரக்கு வேனில் நான்கு கிலோ தக்காளி நுாறு ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் தக்காளியை வாங்கிச் சென்றனர்.

