ADDED : டிச 29, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்தூர் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாளை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் துவங்கும்.
காலை 7:00 மணிக்கு மூலவர் அபிேேஷகம் நடந்து வடை மாலை, எலுமிச்ச மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பின்னர் மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இரவு 7:00 மணிக்கு மேல் அலங்காரத்தில் உற்ஸவர் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். பின்னர் தொடர்ந்து சுவாமி திருவீதிஉலா நடைபெறும். நிர்வாகக் கமிட்டி, பரம்பரை அறங்காவலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.