ADDED : ஜன 24, 2026 06:39 AM
சிவகங்கை: முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா (இது நம்ம ஆட்டம்- 2026), ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜன., 25 மற்றும் 27 ஆகிய இருநாட்கள் நடைபெறும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஊராட்சி ஒன்றிய அளவில் (தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் - (ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் - (ஆண்களுக்கு மட்டும்), எறிபந்து-(பெண்களுக்கு மட்டும்) ஆகிய போட்டிகள் திருப்பத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லல் அருகே நடராஜபுரம் ஆர்.சி., உயர்நிலை பள்ளி, திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, பூவந்தி அரசு உயர்நிலை பள்ளி, மானாமதுரையில் செவன்த் டே மெட்ரிக் பள்ளி, எஸ்.புதுார் அருகே உலகம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி, கண்ணங்குடி அருகே அனுமந்தக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, காளையார்கோவிலில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இளையான்குடியில் இளையான்குடி மேல்நிலை பள்ளிகளில் ஜன., 25 அன்று நடக்கும்.
அதே போன்று சிங்கம்புணரி அருகே காளாப்பூர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கம், சாக்கோட்டையில் வித்யாகிரி கலை கல்லுாரி, தேவகோட்டை அருகே சருகணி லெவே சர்ச் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஜன., 27 அன்று நடைபெறுகிறது.
விளையாட்டு வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, ஆதார், ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டுடன் வந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டி நடக்கும் நாளில் காலை 10:30 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் வரவேண்டும்.
கண்டிப்பாக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே வீரர்கள் பங்கேற்க முடியும், என்றார்.
