ADDED : ஜூலை 29, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நாளை 63 நாயன்மார்கள் குருபூஜை விழா நடைபெறுகிறது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நாளை காலை 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, 22 கலச பூஜை, தொடர்ந்து யாக சாலை பூஜை நடைபெறும்.
பூஜை நிறைவுக்குப் பின் காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி, 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம், பின்னர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மதியம் 1:00 மணிக்கு நால்வர் கோயில் வலம் வருதல் நடைபெறும்.