/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டாங்கிபட்டியில் நாளை நலம் காக்கும் முகாம்
/
கண்டாங்கிபட்டியில் நாளை நலம் காக்கும் முகாம்
ADDED : நவ 07, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கண்டாங்கிபட்டி மவுண்ட் லிட்ரா ஜி பள்ளியில் நவ., 8 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனை இலவசமாக நடத்தப்படும். இது தவிர கண், காது மூக்கு தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநல, சர்க்கரை நோய் மருத்துவம், நுரையீரல் நோய், பொது மருத்துவம், இதயம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.
முகாமிற்கு வருவோர் தங்களின் ஆதார் அட்டை நகலுடன் வரவும். மருத்துவ காப்பீடு அட்டை வேண்டுவோர் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வி.ஏ.ஓ.,விடம் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கான சான்றுடன் வரவும் என தெரிவித்துள்ளனர்.

