/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுற்றுலா பகுதியான சுட்டிநெல்லிப்பட்டி
/
சுற்றுலா பகுதியான சுட்டிநெல்லிப்பட்டி
ADDED : டிச 04, 2025 05:28 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள சுட்டி நெல்லிப்பட்டி கண்மாய் நிறைந்து, மறுகால் பாய்ந்து ஓடுவதால் மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.
சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மாத்துார் அருகே சுட்டிநெல்லிப்பட்டி உள்ளது. இக்கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாயக்கண்மாய் உள்ளது.
இக்கண்மாய்க்கு பள்ளத்துார், பாலையூர் கண்மாயில் இருந்து தண்ணீர் வருகிறது. இக்கண்மாயிலிருந்து தண்ணீர் மித்ராவயல் வரை செல்கிறது. கண்மாய் நிரம்பி மறுகால் பாயத் தொடங்கியுள்ளது.
கலுங்கில் வரிசையாக உள்ள படிகளில் தண்ணீர் செல்வதை பார்ப்பதற்கும், குளித்து மகிழ்வதற்கு ஏராளமான மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். அப்பகுதியே சுற்றுலா பகுதி போல் காட்சி அளிக்கிறது.

