/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கானாடுகாத்தானில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கானாடுகாத்தானில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 01, 2025 07:39 AM

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானின் புத்தாண்டு மற்றும் விடுமுறை நாளையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக செட்டிநாட்டுப் பகுதி விளங்குகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் செட்டிநாட்டுக்கு வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை, புத்தாண்டையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாபயணிகள் செட்டிநாடு பகுதிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலா வரும் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் கானாடு காத்தானில் இல்லை.
சுற்றுலாபயணிகளுக்கு போதிய தங்கும் இடம், கழிப்பிட வசதி, பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.