/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் அடிக்கடி பழுதாகி நிற்கும் டவுன் பஸ்கள்
/
மானாமதுரையில் அடிக்கடி பழுதாகி நிற்கும் டவுன் பஸ்கள்
மானாமதுரையில் அடிக்கடி பழுதாகி நிற்கும் டவுன் பஸ்கள்
மானாமதுரையில் அடிக்கடி பழுதாகி நிற்கும் டவுன் பஸ்கள்
ADDED : டிச 01, 2024 11:59 PM

மானாமதுரை; மானாமதுரை பகுதியில் ஓடும் லொட,லொட அரசு டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கட்டிக்குளம், தாயமங்கலம், பரமக்குடி, இளையான்குடி, நரிக்குடி,தெ.புதுக்கோட்டை, மல்லல், சிப்காட் உட்பட பல்வேறு ஊர்களுக்கு தினம்தோறும் ஏராளமான டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.
இதில் பெரும்பாலான பஸ்கள் லொட, லொடவென்று மிகவும் சேதமடைந்த பஸ்களாக செல்கின்ற நிலையில் அடிக்கடி இந்த பஸ்கள் கிராம பகுதிகளுக்கு செல்லும்போது பழுதடைந்து நடுவழியில் நிற்பதினால் பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகங்கைக்கு சென்ற 17ம் நம்பர் கொண்ட அரசு டவுன் பஸ் பழுதாகி காந்தி சிலை அருகே நின்றதால், பஸ்ஸில் வந்த பயணிகள் நீண்ட நேரத்திற்கு பிறகு மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது, மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான டவுன் பஸ்கள் மிகவும் பழுதான நிலையில் உள்ளதால் அடிக்கடி நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே மானாமதுரை பகுதியில் இயக்கப்படும் பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.