/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தம்; புறநகர் பஸ்களால் பெண்கள் அதிருப்தி
/
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தம்; புறநகர் பஸ்களால் பெண்கள் அதிருப்தி
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தம்; புறநகர் பஸ்களால் பெண்கள் அதிருப்தி
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தம்; புறநகர் பஸ்களால் பெண்கள் அதிருப்தி
ADDED : பிப் 23, 2024 05:10 AM
மானாமதுரை : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் டவுன் பஸ் இயக்கப்படும் நேரத்தில் புறநகர் பஸ்களை இயக்குவதால் மகளிர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து தாயமங்கலம், இளையான்குடி, பரமக்குடி, சிவகங்கை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் நரிக்குடி, வீரசோழன் கொட்டகாட்சியேந்தல், சின்னகண்ணனுார், மல்லல், கட்டிக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேற்கண்ட ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படும் நேரத்தில் டவுன் பஸ்களுக்கு பதிலாக புறநகர் பஸ்களை இயக்குவதால் மகளிர் இலவசமாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மகளிர் சிலர் கூறுகையில், மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே டவுன் பஸ்கள் இயக்கப்படும் கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் பழுதான தாக கூறி புறநகர் பஸ்களை இயக்கி வருகின்றனர்.
இதனால் மகளிர் இலவசமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.மேலும் புறநகர் பஸ்களில் கட்டணம் கூடுதலாக இருப்பதாலும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.
போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்களை முறையாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில்,மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் கிராம பகுதிகளுக்கு செல்லும்போது ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கு மாற்று பஸ்ஸாக புறநகர் பஸ்களை இயக்கி வருகிறோம். இதில் மகளிர் இலவசமாகவே பயணம் செய்யலாம், டிக்கெட் கூடுதலாக வசூல் செய்யப்படுவது கிடையாது என்றார்.