/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழிற்சங்கத்தினர், பணியாளர்கள் மோதல் அரசு போக்குவரத்து கழகத்தில் போராட்டம்
/
தொழிற்சங்கத்தினர், பணியாளர்கள் மோதல் அரசு போக்குவரத்து கழகத்தில் போராட்டம்
தொழிற்சங்கத்தினர், பணியாளர்கள் மோதல் அரசு போக்குவரத்து கழகத்தில் போராட்டம்
தொழிற்சங்கத்தினர், பணியாளர்கள் மோதல் அரசு போக்குவரத்து கழகத்தில் போராட்டம்
ADDED : ஜன 31, 2024 01:57 AM

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தமிழக அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் தி.மு.க., தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொ.மு.ச.,) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்கள் தாக்கியதாக கூறி அலுவலகப்பணியாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்குடி மண்டல தொ.மு.ச., நிர்வாகிகள் 2021 ஆண்டு சந்தா தொகை ரூ.ஆயிரத்து 200 மற்றும் நன்கொடை தொகை ரூ.800 என ரூ.2ஆயிரத்தை ஜனவரி சம்பளத்தில் பிடித்தம் செய்ய கோரிக்கை விடுத்தனர். மண்டல அலுவலக நிர்வாகத்தினர் சந்தா தொகையை பிடித்தம் செய்யாமல் மவுனம் சாதித்து வருவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் தொ.மு.ச., நிர்வாகிகள் ஈடுபட்டதுடன் கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடத்தினர்.
நேற்று அலுவலகப்பணியாளர்களுக்கும் தொ.மு.சங்கத்தினருக்கும் வாக்குவாதம் முடிந்து மோதல் உருவானது. மேலாளர் உதவியாளர் சக்தி கணேஷை தொழிற்சங்கத்தினர் தாக்கியதாக புகார் எழுந்தது. தொ.மு.ச.,நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி அலுவலக பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக பணியாளர்கள் கூறியதாவது: நேற்று மதியம் அலுவலக கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டது. பணியாளர்கள் பார்த்தபோது தொ.மு.ச., நிர்வாகிகள் உதவி மேலாளரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டனர். பெண் ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். பொது மேலாளரின் நேர்முக உதவியாளர் அலைபேசியில் படம் பிடித்தார்.
தொ.மு.ச.,நிர்வாகிகள் அலைபேசியை பறித்ததுடன் அவரை தாக்கினர். காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு பணிபுரியவே அச்சமாக உள்ளது. பணி பாதுகாப்பு வேண்டும். போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம் என்றனர்.
தொ.மு.ச., பொதுச் செயலாளர் பச்சமால் கூறியதாவது:
காத்திருக்கும் போராட்டத்தில் 4 நாட்களாக ஈடுபட்டு வருகிறோம். நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்களே கண்ணாடியை உடைத்து விட்டு பெண்கள் உட்பட பணியாளர்களை வைத்து போராட்டம் செய்கின்றனர். தொ.மு.ச., நிர்வாகிகளை நிர்வாகத்தினர் பழி வாங்குகின்றனர் என்றார்.