/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் கட்டட வசதி இருந்தும் பாதையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள்
/
மானாமதுரையில் கட்டட வசதி இருந்தும் பாதையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள்
மானாமதுரையில் கட்டட வசதி இருந்தும் பாதையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள்
மானாமதுரையில் கட்டட வசதி இருந்தும் பாதையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள்
ADDED : ஜூன் 07, 2025 12:17 AM

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் கடைகள் வைப்பதற்கு போதிய இடம் இருந்தும் வியாபாரிகள் தரையில் பொருட்களை விரித்து காய்கறி வியாபாரம் செய்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இங்கு மதுரை திருப்புவனம் திருப்பாச்சி சிவகங்கை இளையான்குடி பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சார்ந்த 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்கின்றனர். மானாமதுரை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருட்கள் வாங்க வாரச்சந்தைக்கு வருகின்றனர்.
கடந்த வருடம் வியாபாரிகள் மற்றும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு நகராட்சி சார்பில் பழைய கட்டடத்தை இடித்து விட்டு 300க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டன.
ஆனால் வியாபாரிகள் அந்த இடத்தில் காய்கறிகளை வைத்து விற்காமல் நடைபாதையில் காய்கறிகளை வைத்து விற்கின்றனர். இருபுறமும் காய்கறிகளை விரித்துள்ளதால் மக்கள் நடந்து சென்று காய்கறி வாங்க முடியவில்லை. மேலும் வியாபாரிகள் தாழ்வாக தார்பாய் கட்டியுள்ளதால் மக்கள் குனிந்து சென்றே பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட்ட வாரச்சந்தையில் கடைகள் சிறியதாக இருப்பதால் அதில் பொருட்களை மட்டுமே வைக்க முடிகிறது.இதனால் தரையில் பொருட்களை விரித்து விற்கிறோம் என்றனர்.