ADDED : பிப் 06, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகம் ஆர்ச் எதிரே சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயம் தலைமை வகித்தார். சாலையோர வியாபாரிகள் சங்க ராஜேஸ்வரி, சங்கம்மாள் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா பேசினார். சாலையோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்தவேண்டும்.
மாவட்டம் முழுவதும் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். வணிகக்குழு தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

