தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தகிக்கும் வெயிலில் தவிக்கும் வியாபாரிகள்

தகிக்கும் வெயிலில் தவிக்கும் வியாபாரிகள்

தகிக்கும் வெயிலில் தவிக்கும் வியாபாரிகள்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 08:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: தமிழகத்தில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் மே வரை கோடை வெயிலின் தாக்கம் இருப்பது வழக்கம், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக எல் நினோ தாக்கம் காரணமாக செப்டம்பர் வரை வெயிலின் தாக்கம் உள்ளது. இடையில் ஒரு சில நாட்கள் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கத்தால் நிலங்கள் உறிஞ்சி விடுகின்றன. திருப்புவனம் , மடப்புரம், லாடனேந்தல், தட்டான்குளம் உள்ளிட்ட ரோட்டோர கடைகள் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

கடை முன்புறம் சிமென்ட், தார்ச்சாலை இருப்பதால் வாடிக்கையாளர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக நிற்கவே முடிவதில்லை,

கடை முன்புறம் ஓலை கூரை அமைக்க கூடாது என தடை உத்தரவு உள்ளதால் பலரும் கூரை அமைக்கவில்லை. இதனால் வெயிலின் தாக்கம் கடையின் முன்புறம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் நின்று பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

வியாபாரிகள் பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் கடை முன்புறம் அடுக்கி வைப்பது வழக்கம், வெயிலின் தாக்கத்தால் உணவு பொருட்கள் எளிதில் நிறம் சுவை மாறி பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறி விடுகிறது.

வெயில் காரணமாக தேங்காய் வெடித்து விடுவதால் வியாபாரிகள் ஈர சணல் சாக்குகளை பயன் படுத்தி பாதுகாத்து வருகின்றனர்.

கடும் வெயில் காரணமாக பூக்கள் விற்பனை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பூக்கள் விரைவில் மலர்ந்து வாடி விடுவதால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தை தணிக்க வியாபாரிகள் பலரும் கடை முன்புறம் சாக்குகளை விரித்து அதில் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us