/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் ரோடுகளில் வாகன நெரிசல் தொடர்கிறது; ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை மேம்படுத்துவதில் மெத்தனம்
/
திருப்புத்துார் ரோடுகளில் வாகன நெரிசல் தொடர்கிறது; ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை மேம்படுத்துவதில் மெத்தனம்
திருப்புத்துார் ரோடுகளில் வாகன நெரிசல் தொடர்கிறது; ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை மேம்படுத்துவதில் மெத்தனம்
திருப்புத்துார் ரோடுகளில் வாகன நெரிசல் தொடர்கிறது; ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை மேம்படுத்துவதில் மெத்தனம்
ADDED : மார் 19, 2025 06:42 AM

திருப்புத்துார் நகருக்குள் முக்கிய ரோடுகளான சிவகங்கை, மதுரை, காரைக்குடி,புதுக்கோட்டை,திண்டுக்கல்,கண்டரமாணிக்கம் நெடுஞ்சாலை ரோடுகள் செல்கின்றன. நகரில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் இந்த ரோடுகளிலேயே அமைந்துள்ளன.
இதனால் வெளியூரில் இருந்து வரும் கார்,பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் டூ வீலர் உள்ளிட்ட பல வாகனங்களும் இந்த ரோடுகளில் அதிகமாக செல்கின்றன.
இந்த ரோடுகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. ரோட்டை கடக்க பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
நகரின் தெருக்களில் தற்போது நடைபெறும் குடிநீர் திட்டப்பணிகளால் ரோடுகள் சேதமடைந்து விட்டன.தெருக்களில் போக்குவரத்து சிரமமாக உள்ளது. குறிப்பாக இரவில் டூ வீலரில் செல்வது கடினமாக உள்ளது. ரோட்டோரங்களில் பாதசாரிகளுக்கான இடத்தில் நடைபாதை கடைகள், வணிக நிறுவனங்களின் விளம்பர போர்டுகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் நடக்க இடம் இல்லாமல் வாகனங்கள் செல்லும் ரோட்டில் நடக்க முயற்சிப்பதால் விபத்தும் அதிகரித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை முழுமையாக மீட்டு போக்குவரத்திற்கு மட்டும் பயன்படுத்தும்படி நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
அது போல தெருக்களில் செல்லும் ரோடுகளையும் மேம்படுத்த கோரியுள்ளனர். நகரில் மே மாதம் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைய உள்ளது.
அதன் பின்னர் ரோடுபணிகளை துவக்க பேரூராட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அப்போது சாலைகளில் முழுமையாக சர்வே செய்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி ரோட்டை விரிவாக்கம் செய்து புனரமைக்க வேண்டும்.
பேரூராட்சியினர் கூறுகையில், மே மாதம் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்து விடும். தற்போது திட்டப்பணிகள் முடிந்த 2,3,10 வார்டுகளில் உள்ள ரோடுகளில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்படுகிறது.
ரோடுகளை புதுப்பிக்க ரூ 2 கோடி நிதி அனுமதி கோரப்பட்டுள்ளது. இது போல மற்ற வார்டுகளுக்கும் படிப்படியாக ரோடு புதுப்பிக்கப்படும். ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாமாகவே அகற்றிக் கொண்டு பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.' என்றனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், வருவாய்த்துறையினருடன் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற ஆய்வு செய்யப்படுகிறது.
ரோடு புதுப்பிக்கும் பணிக்கு முன்பாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும்' என்றனர்.
திருப்புத்துார், மார்ச் 19--
திருப்புத்துாரில் முக்கிய ரோடுகளில் உள்ள வாகன நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலை மற்றும் தெருவிலுள்ள ரோட்டை புதுப்பிக்கும் போது ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக ரோடு அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.