/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி
/
திருப்புத்துாரில் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி
திருப்புத்துாரில் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி
திருப்புத்துாரில் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி
ADDED : செப் 29, 2025 06:43 AM
திருப்புத்தூர், : திருப்புத்தூர் மதுரை ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
திருப்புத்தூர் நகரின் பிரதான ரோடாக நான்கு ரோடு முதல் அண்ணாத்துரை சிலை வரையிலான ரோடு உள்ளது. இந்த ரோடு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரோட்டில் டூ வீலர்கள் செல்லும் பகுதிக்கான கோடு போடப்படவில்லை. அப்பகுதி தற்போது டூ வீலர்கள், 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. இதனால் பஸ்கள் செல்லும் போது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளன.
பொதுமக்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக ஸ்டேட் பேங்க் முதல் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு வரை இந்த நிலை தொடர்கிறது.
மேலும் ரோட்டில் கடைகளின் விளம்பர போர்டுகளை வைத்து ஆக்கிரமிப்பதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மதுரை ரோட்டில்உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையின்றி வாகனங்கள் சென்றுவர போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.