/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் திணறல்
/
தேவகோட்டையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் திணறல்
தேவகோட்டையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் திணறல்
தேவகோட்டையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் திணறல்
ADDED : மார் 15, 2024 11:59 PM
தேவகோட்டை : தேவகோட்டை மெயின் ரோட்டில் கடைகள் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் திணறி தவிக்கின்றனர்.
தேவகோட்டையில் ரோடுகள் கடைகள் ஆக்கிரமிப்பால் திணறி வருகிறது. ரோட்டோர தள்ளுவண்டி கடைகளால் நெரிசல் அதிகரிக்கிறது. போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதே இல்லை. நகரில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்களில் சீருடை அணிந்து டிரைவர்கள் ஓட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆட்டோக்கள் அசுர வேகத்தில் நகரில் செல்வதால், விபத்துக்களும் அதிகரிக்கின்றன.
இளைஞர்கள் 'ரேஸ் பைக்குகளை' அதிவேகமாக ஓட்டி சென்று நகரில் நடமாடும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். தேவகோட்டையில் நகராட்சி சார்பில் சிறு, குறு தெருக்களில் கூட தார் ரோடு போடப்படுகிறது. ஆனால், முக்கிய ரோடான தியாகிகள் சாலை, சிலம்பணி சன்னதி தெரு ரோடுகள் சிதிலமடைந்து கிடக்கின்றன.
இது குறித்து அழகாபுரி நடுத்தெரு அரவிந்த்குமார் கூறியதாவது: நகரில் திருச்சி -- ராமேஸ்வரம் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்துவிட்டன. முக்கிய வீதிகளில் ரோடுகளின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. அதிவேக ஆட்டோ, டூவீலர்களால் விபத்துக்கள் நேரிடுகின்றன. இவற்றை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

