/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்தூர் - மதுரை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு
/
திருப்புத்தூர் - மதுரை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு
திருப்புத்தூர் - மதுரை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு
திருப்புத்தூர் - மதுரை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு
ADDED : நவ 28, 2025 08:04 AM
திருப்புத்துார்: திருப்புத்தூர் - மதுரை ரோட்டில் ஆக்கிரமிப்புகள், வாகன நிறுத்தங்களால் வாகனப்போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
திருப்புத்தூர் நகரின் முக்கியமான ரோடாக மதுரை ரோடு உள்ளது. வங்கிகள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம்.
இதனால் இந்த ரோட்டில் இருபுறமும் டூ வீலர்கள் வரிசையாக நிறுத்தப்படுகிறது. மேலும் பல இடங்களில் நடைபாதைக் கடைகள் உள்ளன.
கூடுதலாக கடைகளின் விளம்பர போர்டுகளும் ரோடுகளில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
மேலும் ரோட்டோரங்களில் 4 சக்கர வாகனங்களும் கட்டுப்பாடின்றி நிறுத்தப்படுகின்றன.
இதனால் பாதசாரிகள் ரோடுகளை கடக்க சிரமமாக உள்ளது. குறிப்பாக வாணியன் கோயில் ரோடு சந்திப்பில் வாகனங்கள் நிறுத்தப்படும் போது போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது.
இதனால் ரோட்டோரத்தில் பாதசாரிகள் நடக்கும் இடத்தில் விளம்பர போர்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.