/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மானாமதுரை ரோடு அகலப்படுத்தும் பணியால் போக்குவரத்தில் பாதிப்பு தொடர்கிறது
/
சிவகங்கை மானாமதுரை ரோடு அகலப்படுத்தும் பணியால் போக்குவரத்தில் பாதிப்பு தொடர்கிறது
சிவகங்கை மானாமதுரை ரோடு அகலப்படுத்தும் பணியால் போக்குவரத்தில் பாதிப்பு தொடர்கிறது
சிவகங்கை மானாமதுரை ரோடு அகலப்படுத்தும் பணியால் போக்குவரத்தில் பாதிப்பு தொடர்கிறது
ADDED : ஏப் 16, 2025 08:39 AM

மானாமதுரை : மானாமதுரையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோடு குறுகலாக இருப்பதை தொடர்ந்து இதனை விரிவாக்கம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள் நீண்ட வருடமாக கோரிக்கை விடுத்தனர்.
நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு விரிவாக்கம் செய்வதற்காக அளவீடு செய்யப்பட்டது. சில வாரங்களாக மானாமதுரை சிப்காட் பகுதியில் இருந்து நகர் பகுதிக்குள் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது: மானாமதுரை சிவகங்கை ரோட்டில் அகலப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் காலை, மதியம் மற்றும் மாலையில் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் ரோட்டின் மையப்பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தி பணி நடைபெறுவதால் இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் இந்த ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிற நிலையில் காலை பள்ளி துவங்கும் நேரத்திலும் மாலையிலும் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ரோடு அகலப்படுத்தும் பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது எவ்வித பாரபட்சமின்றியும் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு அகலப்படுத்தும் பணி மக்கள் பாதிப்பு இல்லாத நேரத்தில் நடைபெற வேண்டும் என்றனர்.