/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் போக்குவரத்து நெருக்கடி
/
தேவகோட்டையில் போக்குவரத்து நெருக்கடி
ADDED : நவ 01, 2024 04:57 AM
தேவகோட்டை: தேவகோட்டையில், போதிய போலீசார் போக்குவரத்து காவல் பணியில் இன்றி, பிற மாவட்ட பாதுகாப்பு பணிக்கு சென்றதால், போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் தவித்தனர்.
தேவகோட்டை சப் - டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் முதல் 2 ம் நிலை காவலர் வரை பாதுகாப்பு பணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று விட்டனர். சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே போலீசார் பணியில் இருந்தனர்.
இதனால், சென்னை, திருப்பூர், கோயம்புத்துாரில் இருந்து தீபாவளிக்காக பஸ்சில் தேவகோட்டை வந்த பயணிகள் போக்குவரத்து நெருக்கடியில் தவித்தனர். அதேபோன்று தீபாவளிக்கு பொருட்களை வாங்க கடைவீதிக்கு சென்ற மக்களை ஒழுங்குபடுத்த போதிய போலீஸ் இல்லாததால், வாகன நெருக்கடியில் தவித்தனர்.
போதிய போலீசார் இல்லாததால், கடைக்காரர்கள் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்ததால், நெருக்கடியும் அதிகரித்து காணப்பட்டன. இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாத நிலை தென்பட்டது.
இனி வரும் காலங்களில் திருவிழா காலங்களில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க போதிய போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.

