/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் நான்கு ரோடு சந்திப்பில் தொடரும் போக்குவரத்து குளறுபடி

ADDED : செப் 05, 2025 11:48 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு இல்லாததால் ஏற்படும் வாகனப் போக்குவரத்து நெருக்கடியை போக்க போலீசார் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியமாகும்.
திருப்புத்துார் நகரில் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக நான்கு ரோடு உள்ளது. இங்கு காரைக்குடி,புதுக்கோட்டை,மதுரை, கண்டரமாணிக்கம் ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் உள்ளூர்,வெளியூர் வாகனங்கள் அதிகமாக கடந்து செல்கின்றன.
அருகில் திருத்தளிநாதர் கோயில், பெருமாள் கோயில், கருப்பர் கோயில், திருமண மண்டபங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதி என்பதாலும், டாஸ்மாக் கடையும் இந்த ரோட்டில் உள்ளதாலும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.
இந்த சந்திப்பில் 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் கூட முழுமையாக போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு இருப்பதில்லை. இதனால் வாகனங்கள் எதிர் கொண்டு நிற்பது அவ்வப்போது நடக்கிறது.
இதனால் சிறு,சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த போக்குவரத்துக் குளறுபடியை நீக்க போதிய தானியங்கி சிக்னல் அமைக்க நீண்ட காலமாக கோரப்படுகிறது.
மேலும் காலை, மாலை நேரம் மட்டுமின்றி கண்டிப்பாக தொடர் போலீஸ் கண்காணிப்பு அவசியமாகும்.