/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாய் பாலம் பழுதால் போக்குவரத்து பாதிப்பு
/
கால்வாய் பாலம் பழுதால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 24, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே கால்வாய் பாலம் உடைந்துள்ளதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் இருந்து இப்பேரூராட்சி வழியாக செல்லும் பெரியாறு நீட்டிப்புக் கால்வாயில் சில இடங்களில் இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டன.
அரசினம்பட்டி, சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இக்கால்வாய் பாலங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
ஆனாலும் அவ்வழியாகவே வாகனங்கள் பயணித்து வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் இப்பாலங்கள் உடைந்து விழுந்து விபத்து நேரலாம்.
எனவே குடியிருப்பு, கிராமப் பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு பாலங்களை சீரமைக்க வேண்டும்.