/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் போக்குவரத்து மாற்றம்
/
மானாமதுரையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : நவ 12, 2024 05:02 AM
மானாமதுரை: மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே போக்குவரத்து போலீசார் சோதனை அடிப்படையில் போக்குவரத்தை மாற்றம் செய்துள்ளனர்.
மானாமதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணாதுரை சிலை வழியாக 4 பகுதிகளிலும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் ஏற்பாட்டில் அண்ணாதுரை சிலை பகுதியில் நான்கு பக்கமும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் எவ்வித நெரிசலுமின்றி செல்லும் வகையில் சோதனை அடிப்படையில் அமைத்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: அண்ணாதுரை சிலை பகுதியில் நான்கு பக்கத்தில் இருந்தும் வாகனங்கள் வரும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதோடு மட்டுமில்லாமல் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இதனை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் தற்போது நான்கு பக்கமும் தடுப்புகள் அமைத்து சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் வாகன ஓட்டிகளும், வாகனங்களும் தொடர்ந்து விபத்து இல்லாமல் எளிதாக சென்று வந்தால் இதனை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.