/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொங்கல் கடைகளால் போக்குவரத்து நெரிசல்
/
பொங்கல் கடைகளால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 14, 2024 11:47 PM

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருப்புவனம் நகரைச் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பொங்கல் உள்ளிட்ட விஷேச நாட்களில் பொருட்கள் வாங்க அனைவரும் திருப்புவனம் வந்து செல்வது வழக்கம், பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று மாலை கடை வீதியில் கரும்பு, மஞ்சள் கிழங்கு கொத்து, பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பலரும் திரண்டனர்.
கிராமங்களில் இருந்து டூவிலரில் வந்த பலரும் ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. போதிய போலீசார் இல்லாததால் நீண்ட வரிசையில் வாகனங்கள் தேங்கி நின்றன. போக்குவரத்து நெரிசலில் பஸ்கள் சிக்கி கொண்டதால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு போக முடியாமல் அவதிப்பட்டனர்.