/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் வாரச்சந்தை ரோட்டில் ஆட்டோக்களை நிறுத்துவதால் நெரிசல்

ADDED : நவ 09, 2025 07:00 AM

இளையான்குடி: இளையான்குடியில் வாரச்சந்தை நடைபெறும் நாட்களின் போது ரோட்டின் இருபுறங்களிலும் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இளையான்குடியில் சனிக்கிழமை வாரச்சந்தை சிவகங்கை ரோட்டில் தாலுகா ஆபிஸ் எதிர்புறம் உள்ள இடத்தில் நடைபெற்று வருகிறது. இளையான்குடி, சாலைக் கிராமம், முனைவென்றி, சூராணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து செல்லும் நிலையில் வாரச்சந்தை முன் ரோட்டின் இரு புறங்களிலும் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் சந்தை அன்று இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.
இளையான்குடி தாலுகா, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய, மின்வாரிய அலுவலகங்கள்,கோர்ட், மற்றும் பள்ளிகள்,வணிக நிறுவனங்களுக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.ஆகவே போலீசார் வாரச்சந்தை அன்று போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.