/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மூத்தோர் தடகள போட்டியில் மாவட்டத்தில் 9 பேர் பங்கேற்பு
/
மூத்தோர் தடகள போட்டியில் மாவட்டத்தில் 9 பேர் பங்கேற்பு
மூத்தோர் தடகள போட்டியில் மாவட்டத்தில் 9 பேர் பங்கேற்பு
மூத்தோர் தடகள போட்டியில் மாவட்டத்தில் 9 பேர் பங்கேற்பு
ADDED : நவ 09, 2025 07:01 AM
காரைக்குடி: ஆசிய அளவில் நடைபெற உள்ள 23வது மூத்தோர் தடகளப் போட்டி யில் இந்தியா சார்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் பங்கேற் கின்றனர்.
மாநில மற்றும் தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம், கணேசன், இனியவள், பூமிநாதன், கார்த்திகா தேவி, ராஜாமணி, வேலுச்சாமி, பொசலான், கோவிந்தன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்று, சென்னையில் நடை பெறும் ஆசிய விளை யாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இப்போட்டியில் கோவிந்தன் 85 வயதுக்குட்பட்ட பிரிவிலும், உசலான் 80 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், வேலுச்சாமி 75 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், ராஜாமணி 70 வயது பிரிவிலும், பூமி நாதன் 55 வயது பிரிவிலும், இனியவள் 45 வயது பிரிவிலும், கார்த்திகா தேவி 35 வயதுக்குட்போட்டோர் பிரிவிலும் விளையாடுகின்றனர்.
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சிவகங்கை மாவட்ட மாஸ்டர் தடகள வீரர்கள் அசோசியேசன் நிர்வாகிகள் வாழ்த்தி வழியனுப்பினர்.

