/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
/
இளையான்குடியில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 23, 2025 04:24 AM

இளையான்குடி: இளையான்குடி மெயின் பஜாரில் சரக்கு லாரிகளால் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடிக்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 250க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வருவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க இளையான்குடி கண்மாய் கரையிலிருந்து மெயின் பஜார் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பைபாஸ் வழியாக வாகனங்கள் வெளியே செல்வதற்கும் ஒரு வழி பாதை அமைக்கப்பட்டது.
இதனை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றாததால் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இளையான்குடி கடைகளுக்கு சரக்குகளை கொண்டு வரும் லாரிகள் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்குவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.
இதனை கண்காணிக்க வேண்டிய டிராபிக் போலீசார் கண்டு கொள்வதில்லை.
இளையான்குடியில் ஒரு வழிப்பாதையை முறையாக கடைபிடித்து சரக்கு வாகனங்களை போக்குவரத்து அதிகம் இல்லாத நேரங்களில் நகருக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

