/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
/
திருப்புவனம் அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
திருப்புவனம் அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
திருப்புவனம் அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : நவ 23, 2025 04:23 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் ரோட்டின் குறுக்கே மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து கமுதி, பரமக்குடி, ராமநாத புரம், ராமேஸ்வரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் திருப்புவனம், லாடனேந்தல் வழியாக சென்று வருகின்றன.
லாடனேந்தல் பஸ் ஸ்டாப் அருகே நேற்று காலை எட்டரை மணிக்கு சாலையோரம் இருந்த மரம் திடீரென ரோட்டின் குறுக்கே சாய்ந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அனைத்து வாகனங்களும் திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டன.
நேற்று காலை திருப்பு வனம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் வெளியூர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மரம் சாய்ந்ததையடுத்து உள்ளுர் மக்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். 30 நிமிடங்களுக்கு பின் போக்குவரத்து சீரடைந்தது.
லாடனேந்தல் கிராம மக்கள் கூறுகையில், லாடனேந்தலில் பெரிய அளவில் மழை இல்லை. சாரல் மழை தான், காற்று கூட வீசவில்லை. ஆனால் பிடிமானம் இன்றி பழமையான மரம் வேருடன் சாய்ந்து விட்டது. சாலையோரம் விபத்தை ஏற் படுத்தும் வகையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும், என்றனர்.

