/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் போக்குவரத்து நெரிசல்
/
இளையான்குடியில் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 02, 2025 04:27 AM
இளையான்குடி: இளையான்குடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் ஒரு வழி பாதையை அமல்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டாரத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பல்வேறு பணிகளுக்காக இளையான்குடிக்கு வருகிறனர். அதிகரித்த போக்குவரத்து நெரிசலால் சில வருடங்களுக்கு முன்பு இளையான்குடி நகர் பகுதியில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.
அதனை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் முறையாக பின்பற்றாத காரணத்தினாலும், டிராபிக் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தாததாலும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட துாரம் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
நகர் பகுதிக்குள் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க சிவகங்கை ரோட்டில் 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டும் முழுமையாக செயல்படாததால் பழைய நிலைமையே தொடர்ந்து வருகிறது.
இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
இளையான்குடி நகர் பகுதியில் ஒரு வழி பாதையை அமல்படுத்த டிராபிக் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

