/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தை அருகே போக்குவரத்து நெரிசலால் அவதி
/
மானாமதுரை வாரச்சந்தை அருகே போக்குவரத்து நெரிசலால் அவதி
மானாமதுரை வாரச்சந்தை அருகே போக்குவரத்து நெரிசலால் அவதி
மானாமதுரை வாரச்சந்தை அருகே போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : செப் 27, 2025 04:09 AM

மானாமதுரை: மானாமதுரையில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு மதுரை திருப்புவனம் திருப்பாச்சி, சிவகங்கை இளையான்குடி பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்கின்றனர்.
மானாமதுரையில் இருந்து தெ.புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் ரோட்டை ஒட்டி வாரச்சந்தை உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொருட்களை வாங்க வருபவர்களால் சந்தை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ரோட்டின் இருபுறமும் கடைகள் வேறு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.