/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாரச்சந்தை நாட்களில் போக்குவரத்து...நெரிசல்: திக்கு முக்காடும் போக்குவரத்து போலீசார்

ADDED : செப் 04, 2025 11:41 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசாரே திணறுகின்றனர். இப்பேரூராட்சில் நான்கு ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்டை ஒட்டி வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு வியாழன் தோறும் சந்தை நடைபெறும்போது சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அன்றைய தினம் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை நான்கு ரோடு சந்திப்பு, வேங்கைப்பட்டி ரோடு பகுதியில் மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு வாகனங்கள் நெரிசலில் அணிவகுத்து நிற்கின்றன.
காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் இந்த நெரிசலில் சிக்கி தாமதமாக செல்லும் நிலை உள்ளது. பல்வேறு பணி நிமித்தமாக செல்வோரின் நிலை பரிதாபமாக உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட இச்சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது.
சாலைகளில் ஆக்கிரமிப்பு ஒருபக்கம், ரோட்டுக்கு வந்த சந்தை மற்றொரு பக்கம் என நெரிசலுக்கு காரணம் ஆகிறது. சில ஆண்டு களாகவே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வாரச்சந்தை நாட்களில் கடும் போராட்டத்தை சந்தித்து வரும் நிலையில் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அப் பகுதியை எட்டிக்கூட பார்ப்பதில்லை.
நெரிசலால் அசம்பா விதங்கள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாரச்சந்தை கடைகளை ரோட்டில் போடுவதை மாற்றியமைக்க வேண்டும்.