/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் கோடி, கோடியா, கஞ்சா கடத்தல்
/
தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் கோடி, கோடியா, கஞ்சா கடத்தல்
தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் கோடி, கோடியா, கஞ்சா கடத்தல்
தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் கோடி, கோடியா, கஞ்சா கடத்தல்
ADDED : மார் 12, 2024 11:36 PM
சிவகங்கை : தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் கோடி, கோடியாய் கஞ்சா கடத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தி.மு.க., அரசுக்கு எதிராகவும் இளைஞர்களை முடக்கும் போதை பொருள்களுக்கு எதிராகவும் அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், தமிழகத்தில் கோடி, கோடியாய் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, மழை இல்லை. இது குறித்து தமிழக அரசுக்கு எந்த கவலையும் இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை பொருட்கள் கடத்தல் நடக்கிறது. பள்ளி, கல்லுாரி அருகில் கஞ்சா தாராளமாக புழங்குகிறது. இப்படியே போனால் வருங்கால சந்ததி மிகவும் பாதிப்படையும். இவற்றையெல்லாம் தடுக்க வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.கவிற்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.