/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்குறள் திருப்பணி திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
/
திருக்குறள் திருப்பணி திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
திருக்குறள் திருப்பணி திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
திருக்குறள் திருப்பணி திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : ஆக 22, 2025 02:57 AM
சிவகங்கை: சிவகங்கையில் பள்ளி, கல்லுாரி மாணவர், பொதுமக்களுக்கு திருக்குறள் பயிற்சி அளிக்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்
அவர் கூறியதாவது: தமிழ் வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் குறள் பரிசு திட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும், மக்களிடம் திருக்குறள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 'திருக்குறள் திருப்பணிகள்' திட்டப்பணிகளை செயல்படுத்த மாவட்டத்திற்கு ரூ.3 லட்சம் வரை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்காக திருக்குறள் திருப்பணி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு மூலம் நுண்பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்து, மூன்று குழுக்கள் வீதம் ஆண்டுக்கு 30 வாரங்கள் திருக்குறள் பயிற்சி வகுப்பு, கருத்தரங்கு நடத்தப்படும். இப்பயிற்சி நடைபெறும் இடம், நாள் குறித்த விபரங்களை தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு பயிற்சி கட்டணம் இல்லை. பங்கேற்பு சான்று வழங்கப்படும். திருக்குறள் பயிற்சி வகுப்பில் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம், என்றார்.