UPDATED : நவ 13, 2026 05:58 PM
ADDED : நவ 13, 2026 05:55 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தபால் நிலையங்களில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்ய உள்ளதால், நவ., 16 முதல் 24 வரை காப்பீடு சார்ந்த பரிவர்த்தனை இருக்காது என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, அனைத்து தபால் நிலையங்களிலும் ‛இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட் சொலுசன்’ என்ற புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக நவ., 16 முதல் 24 வரை அனைத்து தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களிலும் அஞ்சல் ஆயுள் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக எந்தவித பரிவர்த்தனைகளும் நடக்காது என்றார். ///
