/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை போலீசாருக்கு இடமாறுதல் கலந்தாய்வு
/
சிவகங்கை போலீசாருக்கு இடமாறுதல் கலந்தாய்வு
ADDED : டிச 03, 2024 05:42 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய 165 போலீசாருக்கு நேற்று இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. மாவட்டத்தில் 49 ஸ்டேஷன்கள், மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற பதிவேடு கூடம், சைபர் கிரைம், மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் 3 ஆண்டுக்கு மேல் சில போலீசார் பணியாற்றி வந்தனர். இதை கருத்தில் கொண்டு போலீசார் முதல் சிறப்பு எஸ்.ஐ., வரை 3 ஆண்டுக்கு மேல் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றுபவர்களுக்கு நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது.
சீனியாரிட்டி அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்பட்டு பணிமாறுதல் உத்தரவை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் வழங்கினார். கலந்தாய்வு நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி.,க்கள் கலைக்கதிரவன், பிரான்சிஸ், டி.எஸ்.பி., ஆத்மநாதன், இருதயம், நிர்வாக அலுவலர் வசந்தகுமாரி உள்ளிட்ட அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.