/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2024 12:03 AM

சிவகங்கை : சிவகங்கை போக்குவரத்து பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சி.ஐ.டி.யு., கூட்டமைப்பு கூட்டுக்குழு தொழிற்சங்கங்கள், ஓய்வுபெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கிடவேண்டும். 2003 ஏப்.1க்கு பின் பணியில் சேர்ந்தோர்க்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும். 15வதுஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அண்ணா தொழிற்சங்கம் சின்னத்துரை, சி.ஐ.டி.யு., சமயத்துரை, ஓய்வுபெற்றோர் சங்க குமரராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.