/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மரக்கன்று வளர்ப்பு: ஆணையம் நடவடிக்கை
/
மரக்கன்று வளர்ப்பு: ஆணையம் நடவடிக்கை
ADDED : அக் 18, 2025 03:53 AM
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் சாலையோர மரங்கள் விரிவாக்கப் பணி மற்றும் திருட்டு காரணமாக மாயமாகி வருவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலைக்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
சாலையோரம் மரங்கள் இன்றி வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் தவிக்கின்றனர். தமிழக வனத்துறை சார்பில் லாடனேந்தலில் இருந்து கரிசல்குளம் வரை ஏழாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பிலும் மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டு அதற்கான தொடக்க விழா திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது.
விழாவில் கலெக்டர் மரக்கன்றை நடவு செய்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அலு வலர் கோவிந்தசாமி, திட்ட அலுவலர் கைலாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.