தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்மாய்களில் மரம் வெட்ட ஏலம் த.வெ.க., தி.மு.க.,கடும் போட்டி

கண்மாய்களில் மரம் வெட்ட ஏலம் த.வெ.க., தி.மு.க.,கடும் போட்டி

கண்மாய்களில் மரம் வெட்ட ஏலம் த.வெ.க., தி.மு.க.,கடும் போட்டி


ADDED : செப் 24, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்,செப்.25-

திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று 20 யூனியன் கண்மாய்களில் சீமைக்கருவேல் மரங்களை வெட்டி அகற்றுவதற்காக நடந்த பொது ஏலத்தில் தி.மு.க.,வினர் மற்றும் த.வெ.க.,வினரிடையே போட்டி காணப்பட்டது.

ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை முதல் ஏலத்தில் பங்கேற்க பலரும் வரத்துவங்கினர். குறிப்பாக, த.வெ.க., மற்றும் தி.மு.க.,வினர் அதிகமானோர் ஆர்வமாக வந்திருந்தனர். அப்போது பல கிராமங்களில் ‛ஊருக்கு ஏலம் எடுக்க வேண்டும், மற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் ’ என்று வேண்டினர். ஆனால் பொது ஏலம் தான் நடத்த வேண்டும் என்று த.வெ.க.,வினர் வலியுறுத்தினர். இதனையடுத்து அலுவலகத்திற்கு வெளியே கட்சியினர் ஏலம் எடுப்பது குறித்து பேசினர்.அதில் த.வெ.க.,வினரும் ஆர்வமாக பங்கேற்றனர்.

பொது ஏலத்திற்கான நடைமுறை ஆணையாளர் குமுதம் முன்னிலையில் காலை 11:00 மணி அளவில் துவங்கியது. கண்மாய்களின் பெயரில் ஏராளமானோர் பணம் கட்டத் துவங்கினர். ஒரு கண்மாய்க்கு சராசரியாக 40 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் கட்டிய பின்னர் ஏலம் நடந்தது.

மாலை வரை நடந்த ஏலத்தில் ஆ.தெக்கூர்- வடக்கூர், கண்டவராயன்பட்டி -பையூர், வேலங்குடி-கள்ளூரணி, கே.வைரவன்பட்டி, ரணசிங்கபுரம் இ.அம்மாபட்டி,செவ்வூர்,வஞ்சினிப் பட்டி, வடக்கு இளையாத்தகுடி,கோட்டையிருப்பு கண்மாய்களுக்கு ஏலம் முடிந்தது. பூலாங்குறிச்சி 4கண்மாய்களுக்கு யாரும் பங்கேற்காததால் ஏலம் நடக்கவில்லை.

அதில் கே.வைரவன்பட்டி மெய்யபட்டி வள்ளிக்கொட்டு கண்மாய்க்கு ஏலத்தொகை ரூ 7865 ஐ விட 10 மடங்கு கூடுதலாக ரூ 80 ஆயிரத்திற்கு ஏலம் முடிந்தது. த.வெ.க.,பிரமுகருக்கு ஏலம் கிடைத்தது. பெரும்பாலான கண்மாய்களுக்கு த.வெ.க. மற்றும் தி.மு.க. வினரிடையே போட்டி காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us