/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மரக்கன்று வளர்ப்பு திட்ட துவக்கம்
/
மரக்கன்று வளர்ப்பு திட்ட துவக்கம்
ADDED : ஏப் 06, 2025 07:46 AM

சிவகங்கை : சிவகங்கை சட்ட உதவி மைய அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் நட்பு வளிமண்டல தோட்ட திட்டத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து 9 மாதங்கள் பராமரித்து பின்னர் அந்த மரக்கன்றுகளை ரோட்டின் ஓரம், பொது இடங்கள் பூங்காக்களில் வைக்க உள்ளனர்.
இத்திட்டத்தை நீதித்துறை, வருவாய்துறை, வனத்துறை ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது. நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசுப்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி பாண்டி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 1 நீதிபதி செல்வம், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆப்ரின் பேகம், மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதர்ஷினி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி தங்கமணி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைச்சாமி, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மைய தலைவர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் பிரகாசம், வனவர் பாண்டியராஜன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.