/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு இசைப்பள்ளியில் முப்பெரும் விழா
/
அரசு இசைப்பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : மார் 27, 2025 07:08 AM

சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளி 25 ம் ஆண்டு நிறைவு,ஜவஹர் சிறுவர் மன்ற ஆண்டு,தமிழிசை ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார்.பரதநாட்டிய ஆசிரியை எஸ்.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். சத்குரு சங்கீத வித்யாலயா ஓய்வு முதல்வர் தியாகராஜன் தலைமை வகித்து, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நாதஸ்வர கலைஞர் திருப்புவனம் நாகு வாழ்த்துரை வழங்கினார். விழாவை முன்னிட்டு திருப்பாம்பரம் குஞ்சிதபாதம், சேஷகோபாலன் நாதஸ்வர, தவில் கச்சேரி நடந்தது.
அரசு இசைப்பள்ளி முன்னாள் மாணவர்களின் பரதம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் ஒயிலாட்டம், கரகாட்டமும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு தேவார திருமுறை இன்னிசையும், அவிநாசிநாதனின் பண்ணிசையும் நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி நரம்பிசையும், மதுரை பேராசிரியர் தியாகராஜனின் முழவிசை, மேஷாத்தின் கைப்பறை, பரமக்குடி புருசோத்தமன் முகர்சிங் ஆகிய இசை கருவிகளை இசைத்தனர்.
ஏற்பாட்டை ஆசிரியர்கள் திருவாசக ரமேஷ், ஜெகதீசன், மணிகண்டன்,செல்வமுத்துகுமாரசாமி, சண்முகநாதன் ஆகியோர் செய்தனர். மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினர். மிருதங்க ஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.