/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீடுகள் முன்பாக தேங்கும் கழிவுநீரால் அவதி
/
வீடுகள் முன்பாக தேங்கும் கழிவுநீரால் அவதி
ADDED : ஜன 20, 2025 05:19 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஊராட்சி பகுதியில் வீடுகள் முன்பாக தேங்கும் கழிவுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியை ஒட்டிய அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் சித்தர் முத்துவடுகநாதர் நகர், குறிஞ்சி நகர், தாலுகா அலுவலகம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை.
வீடுகளில் திறக்கப்படும் கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவுகள் வீதியில் கசிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மழைக்காலங்களில் அங்கு குடியிருப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. இப்பகுதியில் சில வீடுகளில் மட்டும் உறிஞ்சிக் குழாய் மூலம் கழிவு நீர் மேலாண்மை செய்யப்படுகிறது.
ஆனால் பல வீடுகளில் ரோட்டிலேயே விடப்படுகிறது.
எனவே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முறையான கழிவுநீர் கால்வை அமைக்க அப்பபகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.