ADDED : ஆக 13, 2025 02:07 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் ஆடி மாதம் கடைசி செவ்வாயை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.
ஆதிபராசக்தி கோட்டையம்மன் கோயிலில் ஒரு வாரம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் விசேஷ அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கு பூஜை, பூச்சொரிதல் செய்தனர். நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காசுக்கடை வீதி முத்துமாரியம்மன் கோயிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. ஒரு வாரம் லட்ச்சார்ச்சனை பூஜை நடந்தன. நேற்று காலையில் பக்தர்கள் பால்குடம், வேல் காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.
மதியம் கோயில் பொங்கலை தொடர்ந்து மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மாலையில் அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர்.
நடராஜபுரம் மாரியம்மன் கோயிலில் ஒரு வாரம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடந்தன. நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராஜாஜி தெரு முத்துமாரியம்மன் கோயிலில் அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. நேற்று பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அழகாபுரி நடுத்தெரு மஞ்சனைப்பேச்சி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிச் செவ்வாயை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.