ADDED : செப் 28, 2025 06:57 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மதுரை மாவட்டம் மேலுாரில் இருந்து 28 வயது பெண் வயிற்று வலியுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்த போது அவருக்கு இடது பக்க சினைப்பையில் நீர் கட்டி இருந்தது தெரியவந்தது.
அந்த பெண்ணிற்கு மகப்பேறு துறை சார்பில் நுண் துளை அறுவை சிகிச்சை (லேப்ரோஸ்கோபி) மூலம் நாலரை கிலோ கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை செயல்படுத்திய மருத்துவ குழு மகப்பேறு தலைவர் நாகசுதா, இணை பேராசிரியர் தென்னரசி, உதவி பேராசிரியர்கள் மெய்யரசி, பிரியதர்ஷினி, மயக்கவியல் துறைத் தலைவர் கணேச பாண்டியன், உதவி பேராசிரியர் மதியழகன் உள்ளிட்டவர்களை கல்லுாரி முதல்வர் சீனிவாசன் பாராட்டினார்.
உடன் மருத்துவக் கண்காணிப்பாளர் தங்கதுரை, நிலைய மருத்துவர் முகமதுரபி, தென்றல் உள்ளிட்டோர் இருந்தனர்.